உலகக் கோப்பை 2019 : அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

மான்செஸ்டர்

லகக்கோப்பை 2019 அரையிறுதி போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் நியுஜிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை 2019 அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டரில் நடந்தது.  இதில் இந்திய அணியும் நியுஜிலாந்து அணியும் மோதின.   நேற்று டாஸ் வென்ற நியுஜிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது.  நேற்றைய ஆட்டத்தில் நியுஜிலாந்து அணி 48.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இன்று மீண்டும் தொடர்ந்தது.

இன்று மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்த நியுஜிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழந்து 239 ரன்கள் எடுத்தது.    அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணிஅயில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 77 ரனகள் எடுத்ததார்.  அடுத்த படியாக தோனி 50 ரன்கள் எடுத்திருந்தார்  ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 32 ரன்கள் எடுத்திருந்தனர்.   எனவே எவ்வளவோ முயன்றும் இந்தியாவால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.

இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.   எனவே இந்தியா 18 ரன்களில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  இறுதி ஆட்டத்தில் விளையாட நியுஜிலாந்து தகுதி பெற்றுள்ளது/

கார்ட்டூன் கேலரி