லண்டன்:

ற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை இந்தியா ஆடிய ஆட்டங்களில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் செயல்பாடு வரவேற்கும்படி இல்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அவரது செயலுக்கு ஆதரவாகவே தற்போதைய கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆட்டத்தின்போது தோனி பந்தை விளாசிய காட்சி

இந்திய அணி இதுவரை ஆடிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கடந்த 13ந்தேதி நியூசிலாந்துடனான ஆட்டம் மட்டும் மழையால் நிறுத்தப்பட்டது. இன்னமும் 3 போட்டிகளை சந்திக்க உள்ளது.

நாளை மறுதினம் (30 ஜூன்) பலம் மிக்க இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூலை 2ந்தேதி வங்காள தேச அணியையும், ஜூலை 6ந்தேதி  இலங்கை அணியையும் சந்திக்க தயாராகி வருகிறது.

தற்போதைய நிலையில்,இதுவரை எந்த அணியாலும் வெல்ல முடியாத நிலையில், தனி ஆவர்த் தனம் காட்டி வருகிறது இந்திய அணி. இந்த நிலையில், நேற்று  மான்செஸ்டரில் மே.இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தோனியின் ஆட்டம் மற்றும் அவரது விக்கெட் கீப்பிங் கடுமையான சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.

மான்செஸ்டர் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால் இந்தியா 300க்கும் மேற்பட்ட ரன்களை குறிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7 விக்கெட் இழந்த நிலையில் 268 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

நடப்பு தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த தோனி, இந்தப் போட்டியிலும் தொடக்கத்தில்  ஏராள மான பந்துகளை வீண் செய்து நிதானமாக ஆடி வந்த நிலையில்,கடைசியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  56 ரன்கள் எடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால், விக்கெட் கீப்பிங்போது,  தொடர்ந்து 2 முறை பந்துகளை கேட்ச் பிடிக்க முயன்று தோல்வி அடைந்தார்.  இது மீண்டும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. நேற்றைய ஆட்டத்தை அவர் சரியாக கவனிக்கவில்லை என்றும், பந்துகளை கையில்  பிடிப்பதற்கு பதிலாக இரண்டு முறை நெஞ்சில் பந்தை வாங்கினார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கேட்ச்சை தவற விட்ட தோனி

தோனியின்  பழைய வேகம் காணாமல் போய்விட்டது என்றும்….. அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் எங்கே சென்றது என்பது தெரியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  வீரேந்திர சேவாக்கும், தனது டிவிட்டர் பதிவு மூலம் தோனியின் ஆட்டத்தை மறைமுகமாக விமர்சித்து  உள்ளார்.

ஆனால் தோனி மீதான  விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் கேப்டன் விராட் கோலி அவருக்கு தோள் கொடுத்து கருத்து தெரிவித்து உள்ளார்.

ஆட்டக்களத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சரியாகவே தோனி புரிந்து வைத்தி ருக்கிறார். சிலருக்கு சில நாட்கள் சரியாக அமையாது, ஆனால்  அது பெரிது படுத்தப்படுகிறது. இதுகுறித்து நாங்கள் ஓய்வறையில் பேசி முடிவெடுத்து இருக்கிறோம் நாங்கள் எப்போதும் தோனியையே ஆதரிப்போம்…

தோனி  பல போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவரைப் பொறுத்தமட்டில் சிறப்பம்சம் என்னவெனில் டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு அணிக்குத் தேவைப்படும் கூடுதல் 15-20 ரன்களை எடுக்க முடிவதே.முடிவில் ஸ்ட்ரைக்கை தன் வசம் வைத்துக் கொண்டு இரண்டு பெரிய சிக்சர்களுடன் முடித்தது ஒரு அணியாக எங்களுக்கு பெரிய உற்சாகத்தை அளித்தது.

ஆட்டக்களத்தில் தோனியுடன் விராட் கோலி

நாங்கள் 250 ரன்கள் எதிர்பார்த்தோம் ஆனால் 270க்கு நெருங்கி வந்தோம். காரணம் தோனி அங்கு இருந்ததுதான். ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக ஆடினார். தோனியின் அனுபவம் 10 முறைகளில் 8 முறை சிறப்பாகவே வந்துள்ளடு. நம்மிடையே சில வீரர்கள் தங்கள் உள்ளுணர்வின் வழிநடத்த லில் பாசிட்டிவாக ஆடுபவர்கள் உள்ளனர். ஆனால் தோனி மட்டுமே களத்திலிருந்து அணிக்கு செய்தியை அனுப்புவார்.

அதாவது, ‘இந்தப் பிட்சில் இது சரியான ஸ்கோர், 260 நல்ல ஸ்கோர், 265 நல்ல ஸ்கோர், போது மானது என்பார் மேலும் 300 அடிக்கப்போய் 230-ல் முடிய வேண்டாம் என்பார். அ வர் அந்த வழியில்தான் எப்போதும் இருப்பார், அதுதான் தோனியின் பலம்.  அதாவது ஆட்டக்களத்தை கணக்கிட்டு ஆட்டத்தைக் கொண்டு செல்வது, எப்போதும் ஆட்டத்தில் இருப்பது, வெற்றிகளுக்கான வழிகளை தேடுவதில் . அவர் ஒரு லெஜண்ட். நம் அனைவருக்கும் இது தெரியும். அவர் நமக்காக பிரமாதமாக ஆடிவருகிறார், தொடர்ந்து ஆடுவார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு கூறினார் விராட்  கோலி கூறி தோனி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.