ண்டன்

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில்  வென்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று லண்டனில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஒவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 349 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மிகவும் குறைவான ரன்களில் இருந்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் மற்றும் ஈயான் மோர்கன் ஆகியோர் ஆட்டம் இழந்தனர் அதன் பிறகு விளையாட வந்த ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் கூட்டணி அணிக்கு சற்று புத்துயிர் அளித்தது.

ஜோ ரூட் 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஜோஸ் பட்லர் 103 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சினால் அதன் பிறகு இங்கிலாந்து அணியினர் ஆட்டம் இழந்த வண்ணம் இருந்தனர். ஆட்ட இறுதியில் இங்கிலாந்து அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகள இழந்து 334 ரன்கள் எடுத்திருந்தது.

அதை ஒட்டி இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக முகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு ஒரு திருப்பு முனையை அளித்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.