உலககோப்பை கிரிக்கெட்2019: இன்று இங்கிலாந்தை எதிர்கொள்ளும் வங்கதேசம்……

லண்டன்:

லக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் 30ந்தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரு போட்டிகள் நடைபெற உள்ளது. 12வது லீக் போட்டி மாலை 3 மணிக்கு இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கார்டிப்நகரில்உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

13வது லீக் போட்டி, டாட்டனில் உள்ள தி கூப்பர் அசோசியேஸ் கன்ட்ரி கிரவுண்டில் மாலை 6 மடணிக்கு ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற உள்ளது. இன்றைய போட்டிகளில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மற்ற அணிகளுடன் மோதுகின்றன.

இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ள  இங்கிலாந்து – வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும்  இங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த நிலையில், இன்றைய ஆட்டம் ஆக்ரோஷமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆட்டத்தின்போது,  இங்கிலாந்து அணி வீரர்களான ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசி அணியின்  வெற்றியை நோக்கி அணியை நகர்த்தி சென்ற நிலையில், அவர்கள் வெளியேறியதும், தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் தோல்வியை சந்திக்க நேர்ந்ததது. இங்கிலாந்து அணியின் மோசமான பீல்டிங்கும் தோல்விக்கு முக்கிய காரணமாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி  கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

அதே வேளையில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் வங்கதேச அணி  முதல் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை தோற்கடித்திருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங்கில் தோல்வியை தழுவியது. பவுலிங்கில் திறமையான வீரர்களை கொண்டுள்ள வங்கதேசம் அணி, இன்றைய ஆட்டத்திலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் என கூறப்படுகிறது. கடந்த இரு ஆட்டத்திலும் அரை சதம் விளாசிய ஷகிப் அல் ஹசனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அவருடன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தமிம் இக்பால்,சவுமியா சர்க்கார் ஆகியோர் இங்கிலாந்தை திணறடிக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன் காரணமாக இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி