உலகக்கோப்பை கிரிக்கெட்2019: இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

லண்டன்:

ங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டம் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிற்பகல் 3 மணிக்கு இங்கிலாந்தின் சவுதாம்டன் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியுள்ளதால், இந்த ஆட்டம் அந்த அணிக்கு மிக முக்கிமானதாக கருதப்படுகிறது. அதேபோல், இந்திய அணி முதல் போட்டியில்  விளையாடுவதால், வெற்றியுடன் தொடரை தொடங்க வேண்டும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் மாலை 6 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டி கென்னிங்டன், ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி