12 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த போட்டியானது இந்தமுறை  இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், போட்டியை காண  ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வரும்  30–ந்தேதி (மே) முதல் ஜூலை 14–ந்தேதி வரை  இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. . இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பை தொடரில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30–ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16–ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா–இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9–ந்தேதி லண்டன் ஓவலில் நடைபெறுகிறது.

இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி நடக்கிறது. ஜூலை 15–ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும்.

உலககோப்பை போட்டி அட்டவணை 

கார்டிஃப் வேல்ஸ் ஸ்டேடியம், கார்டிஃப்

1 ஜூன் – நியூசிலாந்து v இலங்கை (பகல்)
4 ஜூன் – ஆப்கானிஸ்தான் v இலங்கை (பகல்)
8 ஜூன் –இங்கிலாந்து v வங்காளதேசம்(பகல்)
15 ஜூன் – தென்னாப்பிரிக்கா v ஆப்கானிஸ்தான் (பகல்/இரவு)

கவுண்டி மைதானம் பிரிஸ்டல்

1 ஜூன் – ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா (பகல்/இரவு)
7 ஜூன் – பாகிஸ்தான் v இலங்கை (பகல்)
11 ஜூன் – வங்காளதேசம் v இலங்கை (பகல்)

கவுண்டிகிரவுண்ட் டவுன்டன், டவுன்டன்

8 ஜூன் – ஆப்கானிஸ்தான் v நியூசிலாந்து (பகல்/இரவு)
12 ஜூன் – ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் (பகல்)
17 ஜூன் – வெஸ்ட் இண்டீஸ்வங்காளதேசம் (பகல்)

எட்க்பாஸ்டன், பர்மிங்காம்

19 ஜூன்– நியூசிலாந்து v தென்னாப்பிரிக்கா (பகல்)
26 ஜூன்நியூசிலாந்து v பாகிஸ்தான் (பகல்)
30 ஜூன்  – இங்கிலாந்து v இந்தியா (பகல்)
2 ஜூலை – வங்காளதேசம் v இந்தியா (பகல்)
11 ஜூலை– இரண்டாவது அரை இறுதி  (2 v 3) (பகல்)
12 ஜூலை – ரிசர்வ் டே

ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன் 

5 ஜூன் – தென்னாப்பிரிக்கா v இந்தியா (பகல்)
10 ஜூன் – தென்னாப்பிரிக்கா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
14 ஜூன் – இங்கிலாந்து v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
22 ஜூன்– இந்தியா v ஆப்கானிஸ்தான் (பகல்)
24 ஜூன்– வங்காளதெசம் v ஆப்கானிஸ்தான் (பகல்)

ஹெட்பிங்லே, லீட்ஸ்

21 ஜூன் – இங்கிலாந்து v இலங்கை (பகல்)
29 ஜூன் – பாகிஸ்தான் v ஆப்கானிஸ்தான் (பகல்)
4 ஜூலை – ஆப்கானிஸ்தான் v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
6 ஜூலை – இலங்கை v இந்தியா (பகல்)

லார்ட்ஸ், லண்டன்

23 ஜூன் – பாகிஸ்தான் v தென்னாப்பிரிக்கா(பகல்)
25 ஜூன் – இங்கிலாந்து v ஆஸ்திரேலியா (பகல்)
29 ஜூன் – நியூசிலாந்துv ஆஸ்திரேலியா (பகல்/இரவு)
5 ஜூலை – பாகிஸ்தான் v வங்காளதேசம் (பகல்/இரவு)
14 ஜூலை – இறுதிப்போட்டி (பகல்)
15 ஜூலை – ரிசர்வ் டே

ஓல்ட்டிராஃபோர்ட், மான்செஸ்டர்

16 ஜூன் – இந்தியா v பாகிஸ்தான் (பகல்)
18 ஜூன் – இங்கிலாந்து v ஆப்கானிஸ்தான் (பகல்)
22 ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v நியூசிலாந்து(பகல்/இரவு)
27 ஜூன் – வெஸ்ட்இண்டீஸ் v இந்தியா (பகல்)
6 ஜூலை – ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா(பகல்/இரவு)
9 ஜூலை – முதல்அரையிறுதி (1 v 4) (பகல்)
10 ஜூலை – ரிசர்வ் டே

திஓவல், லண்டன்

30 May – இங்கிலாந்து v தென்னாப்பிரிக்கா(பகல்)
2 ஜூன் –தென்னாப்பிரிக்காv வங்காளதேசம் (பகல்)
5 ஜூன் – வங்காளதேசம் v நியூசிலாந்து(பகல்/இரவு)
9 ஜூன் – இந்தியா v ஆஸ்திரேலியா (பகல்)
15 ஜூன் – இலங்கை v ஆஸ்திரேலியா (பகல்)

திரிவர்சைடு, செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்

28 ஜூன் – இலங்கை v தென்னாப்பிரிக்கா(பகல்)
1 ஜூலை – இலங்கை v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
3 ஜூலை – இங்கிலாந்து v நியூசிலாந்து(பகல்)

ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம்

31 May – வெஸ்ட்இண்டீஸ் v பாகிஸ்தான் (பகல்)
3 ஜூன் – இங்கிலாந்து v பாகிஸ்தான் (பகல்)
6 ஜூன் – ஆஸ்திரேலியா v வெஸ்ட்இண்டீஸ் (பகல்)
13 ஜூன் – இந்தியா v நியூசிலாந்து(பகல்)
20 ஜூன் – ஆஸ்திரேலியா v வங்காளதேசம் (பகல்)