லண்டன்:

நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, கேப்டன் விரோட் கோலி  77 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அமிர் பந்தில் அவுட்டாகி வெளியே சென்றார்.  கோலியின் அவுட் சர்ச்சையானது. ஆனால், கோலி அவுட் என அம்பயர் கூறாத நிலையில், அவர் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்டத்தின்போது, அமிர் பந்தில், அவர் அவுட் ஆகாத நிலையில், மட்டையின் (Bat) கைப்பிடி லூசாக இருந்ததால், ஏற்பட்ட சத்தத்தின் காரணமாகவே, பந்து பேட்டில் பட்டதாக நினைத்து களத்தை விட்டு  வெளியேறினார். ஆனால், ரீப்ளேயில் கோலி அவுட் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால், அவர் அவசரப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறியதால் இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது..

விராட் கோலி 65 பந்தில் 7 பவுண்டரிகளுடன்  77 ரன்கள் எடுத்திருந்தார்.  77 வது எடுத்தபோது, அமிர் பந்தில் அவுட்டானதாக நினைத்து  வெளியே சென்றார்.

பெவிலியன் திரும்பிய கோலியின் பேட்டை வாங்கிப் பார்த்த தோனி, கோலியின் பேட்டில் ஹேண்டில் லூஸாக இருப்பதை கண்டு பிடித்தார். இதன் காரணமாகவே சத்தம் எழுந்துள்ளது என்பதை நிரூபித்தார்.

கோலியும் தனது பேட்டை ஆட்டிப்பார்த்த போது இதேபோல் சத்தம் வந்தது. இதைத்தான் அவர் பந்து பட்டது என்று நினைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். தான் அவசரப்பட்டு விட்டோமே என்று கோபமடைந்த கோலி, தனது பேட்டை தரையில் அடித்து  உடைத்தார். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியானது.