உலக கோப்பை கால்பந்து போட்டி: அதிக வயதுடைய வீரராக எஸாம் சாதனை

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற அதிக வயதுடைய வீரராக எகிப்தை சேர்ந்த எஸ்ஸாம் எல் ஹாட்ரி சாதனை படைத்துள்ளார். 45 ஆண்டுகள் 161 நாட்கள் நிரம்பிய எஸாம் எல் ஹாட்ரி பிஃபா உலக கோப்பையில் எகிப்து வீரராக களமிறங்கியுள்ளார். கோல் கீப்பராகவும், அணியின் கேப்டனாகவும் உள்ள எஸாம் உலக கோப்பையில் பங்கேற்பாரா, இல்லையா என்ற வியூகம் அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் உலக கோப்பை போட்டியில் பங்கேற்று அனைவருக்கும் எஸாம் பதிலளித்துள்ளார். இதற்கு முன்பு முன்பு கொலம்பியாவை சேர்ந்த கோல்கீப்பரான ஃபரித்மன்ரோகன் 2014ம் ஆண்டு அதிக வயதுடைய வீரராக உலக கோப்பையில் பங்கேற்றார்.
essan el