டில்லி:

ந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டி சவாலாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்  விராட் கோலி தெரிவித்தார்.

நேற்று இரவு  இங்கிலாந்து புறப்பட்ட இந்திய அணியினர் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தனர். அணியின் பயிற்சியாளர் கும்பளே மற்றும் கேப்டன் கோலி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில்  வரும் 30ந்தேதி ஜூலை 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை சந்திக்க உள்ளது.

இந்தியாவில் இருந்து உலக உலக கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்கள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியினர்  நேற்று இரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  விராட் கோலி,  நான் பங்கேற்கும் 3-வது உலக கோப்பை தொடர் இது.  முந்தைய இரு உலக கோப்பை தொடர்களை காட்டிலும் இது தான் மிகவும் சவால் மிக்க போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.  இந்த முறையில் உலக கோப்பை கிரிக்கெட்போட்டியில் கலந்துகொண்டுள்ள அனைத்து அணிகளும் பலம் வாய்ந்ததாகவே காணப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் அணியை 2015-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை கவனித்தால் அவர்கள் முற்றிலும் வித்தியாசமான அணியாக உருவெடுத்து இருப்பது தெரியும். எந்த அணியும், எந்த ஒரு அணிக்கும் அதிர்ச்சி அளிக்க முடியும். இந்த ஒரு விஷயத்தை நாங்கள் மனதில் கொண்டுள்ளோம். இங்கு மெத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களால் முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்.

உலக கோப்பை போட்டிக்கான எங்களது அணி சரியான கலவையில் வலுவான அணியாக அமைந்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்துக்கு செல்கிறோம். அங்கு முன்கூட்டியே பயணிப்பது நல்ல விஷயமாகும். அணி வீரர்களின்  பதற்றத்தை குறைக்க உதவும். இதே போல் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப நம்மை விரைவில் மாற்றிக்கொள்ள  முடியும்.

உலக கோப்பை போட்டியை பொறுத்தவரை மைதானம் மற்றும் சீதோஷ்ண நிலையை காட்டிலும் ஆட்டத்தின் போது உருவாகும் நெருக்கடியை திறம்பட கையாள்வது தான் மிகவும் முக்கிய மானது. முதல் ஆட்டத்தில் இருந்து முழு உத்வேகத்துடன் விளையாடி வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் சவாலானது.

இவ்வாறு அவர் கூறினார்.