Random image

ஃபீபா: குரோஷியாவை வீழ்த்துமா இங்கிலாந்து ?  

இன்று   உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் மோதும் இங்கிலாந்து – குரோஷியா அணிகளில் எது வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 நாடுகளின் அணிகள் லீக் போட்டிகளில் கலந்துகொண்டன.  அதிலிருந்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. பிறகு  அதிலிருந்து 8 அணிகள் காலிறுதிப் போட்டியில் பங்கேற்றன. அடுத்து  நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றன. அரையிறுதியில் வெற்றிப்பெறும் இரு அணிகள்  ஜூலை 15 ஆம் தேதி நடைபெவுள்ள இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன.

இதற்கிடையே பெல்ஜியம் அணியை வீழ்த்தி பிரான்ஸ் ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. நிலையில் இன்று குரேஷியா – இங்கிலாந்து இடையே அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30க்கு இப்போட்டி துவங்கும்.

 

 

இங்கிலாந்து அணியில் முன்பு பெக்காம், ரூணி போன்ற அதிரடி வீரர்கள் விளையாடினர். ஆனால்  அப்போதெல்லாம் அந்த அணியால் உலகக் கோப்பையை வெல்ல இயலவில்லை.  கடைசியாக 1966 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அதன் பின்னர் வெற்றிக்கோப்பையை பெறவே இல்லை.

1990 ஆம் ஆண்டு ஓரே முறை அரையிறுதிக்கு முன்னேறி மேற்கு ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.

தற்போது இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் மிகுந்த நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.

குரோஷிய அணியைப் பொறுத்தவரை உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறை அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது. இறுதியாக 1998 உலக்க கோப்பை அரையிறுதியில் பிரான்ஸிடம் தோற்று 3-ஆம் இடத்தை பெற்றது.

ஆகவே இந்தமுறை எப்படியாவது இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் களம் காணும். இந்த அணியில் மொட்ரிக், மண்டுஸூகிக் ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக  கோல் கீப்பர் சுபாஸிக் மிகுந்த நம்பிக்கை தருகிறார். இவரை தாண்டி பந்து கோல் போஸ்ட்டுக்குள் செல்வது சிரமம். ஆனால் காயம் காரணமாக இந்தப் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. இது குரேஷிய அணிக்கு மைனஸ்தான்.

ஆனாலும் இரு அணிகளும் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தி  அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.