உலக முட்டை நாள்: சென்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 1.02லட்சம் முட்டைகள் இலவசம்

சென்னை:

ன்று, ‘உலக முட்டை தினம்.’  இதையொட்டி, சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எஸ்கேஎம் நிறுவனம் ஒரு இலட்சத்து இரண்டா யிரம் முட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளது.

முட்டையின் நன்மைகள் குறித்தும், அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்குத் தெரியபடுத்தும் வகையில், 1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

அதன்படி உலக முட்டை நாளான இன்று சென்னை மாவட்ட ரோட்டரி கிளப், எஸ்எஸ்ஐ எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம், எஸ்கேஎம் நிறுவனம் ஆகியவை  இணைந்து விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு இலட்சத்து 2 ஆயிரம் முட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளன.

இந்நிகழ்வில், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, சென்னை மாவட்ட ரோட்டரி கிளப் தலைவர் சஞ்சய் கோயல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த முட்டைகளை அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் தினசரி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவு முட்டை என்பதில் எந்த வித ஐயமுமில்லை. வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ற அளவில் தினசரி சாப்பிடலாம்… முட்டையில்  ஊட்டச்சத்துகள் மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் – ஏ, பி 12, பி 2, பி 5, இ  மற்றும், கோலின், சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.