மதுரை

லகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு, தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் காரணமாக அவசர சட்டம் கொண்டுவந்தது.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி, கோர்ட்டின் வழிகாட்டுதல் படி நடைபெற்று வருகிறது.

மதுரை அருகே உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.

இன்று  அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை கலெக்டர் வீரராகவராவ் மாடுபிடி வீரர்களுடன் சேர்ந்து உறுதிமொழி வாசித்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா குழு சார்பில் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதைய்டுத்து முதலில் கோவில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டன. இதை எந்தவொரு வீரர்கள் பிடிக்கப்பதில்லை. இது காலம்காலமாக கடைபிடித்து வரும் மரபு.

இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 950 காளைகளும், 1650 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் போட்டியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். மேலும்  மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஆரி போன்றோரும் பங்கேற்று உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இலங்கையிலிருந்து அமைச்சர் தொண்டமானின் 3 காளைகள் நாடு கடந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.