விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ ஃபர்ஸ்ட் லுக்…!

விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்துக்கு ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா கடைசியாக ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்திருந்தார்.

வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, க்ரந்தி மாதவ் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். க்ரியேட்டிவ் கமர்சியல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ரொமான்டிக் படமாக இது உருவாகிறது.

இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக், வெளியாகியுள்ளது .