திருச்சூர்

லகப் புகழ்பெற்ற கேரளா மாநில திருவிழாவான திருச்சூர் பூரம் கொரோனாவால் இந்த வருடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 1798 ஆம் ஆண்டு முதல் கேரளாவின் ராஜா ராம வர்ம என அழைக்கப்படும் கொச்சி மன்னர் சக்தான் தம்புரான் திருச்சூர் பூரம் திருவிழாவைத் தொடங்கினார்.   இந்த பூரம் திருவிழா பிரேமக்காவு மற்றும் திருவெம்பாடி ஆகிய இரு கோவில்களில் விமர்சையாக நடத்த்கபட்டாலும்  பல சிறு கோவில்களிலும் குட்டிப்பூரம் என்னும் பெயரில் நடைபெறுகிறது.

வாண வேடிக்கைகள், செண்டை மேளங்கள்,  ஏராளமான அலங்கரிக்கப்பட்ட ய்யானி ஊர்வலங்கள் என இந்த பூரம் திருவிழா கோலாகலமாக் கொண்டாடப்படும்.  இந்த வருடத்துக்கான பூரம் திருவிழா வரும் மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.   மக்கள் அதை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்

கேரள அமைச்சர் வி எஸ் சுனில் குமார், “பூரம் விழா நடக்கும் இருகோவில் தேவசம் போர்ட் நிர்வாகிகள், கோவில் நம்பூதிரிகள், மாநில அரசு பிரதிநிதிகள் ஆகியோரின் ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டு பூரம் திருவிழாவை ரத்து செய்வதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   தேசிய ஊரடங்கு மே மாதம் 3 வரை உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடக்கும்.   இதற்கு 5 அர்ச்சகர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.  பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.  அத்துடன் பூரம் திருவிழா, பொருட்காட்சி, குட்டிப்பூரம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 200 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழா முதல் முறையாக  ரத்து செய்யப்பட்டதாகக் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் ஏற்கனவே கடந்த 1948 ஆம் வ்ருட்ம் காந்தி கொலைக்காக ரத்து செய்யப்பட்டதாகவும் சீனப் போரின் போது ஒருமுறை ரத்து செய்யப்பட்டதாகவும் சிலர் கூறி உள்ளனர்.  இது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.