லண்டன்: அமோனியா நைட்ரேட் வெடிவிபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட லெபனான் நாட்டுக்கு உலக உணவு திட்டத்தின்படி 50 ஆயிரம் டன் கோதுமை மாவு  உதவி வழங்கப்பட்டு உள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே உள்  கடந்த 4ந்தேதி மிகப்பெரிய வெடி விபத்து நடந்தது. இந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவ மனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்தன.  இந்த வெடி விபத்தில் இதுவரை 158 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,  6ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய மடைந்து இருப்பதுடன், பலர் மாயமாகி இருப்பதாகவும்  கூறப்பட்டது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  பெய்ரூட்டின் துறைமுக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. அந்த விபத்தில் பெய்ரூட் நகரமே தலைகீழாக மாறிப்போனது. அங்குள்ள உணவு சேமிப்புக் கிடங்குகளும் எரிந்து சாம்பலாயின. இந்த மாபெரும் விபத்து   உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், லெபனானன் நாட்டுக்கு  50,000 டன்  கோதுமை மாவை  உலக உணவுக்கழகம் வழங்கி உள்ளது. அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ஐநா இந்த உதவியை வழங்கி இருப்பதாக  மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.