உலக கால்பந்து தரவரிசை – இந்திய அணிக்கு 104வது இடம்!

ஜூரிச்: ஃபிஃபா வெளியிட்ட உலகக் கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில், இந்திய கால்பந்து அணிக்கு 104வது இடம் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பாக, இந்திய அணி 108வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, 3 இடங்கள் முன்னேறி 104வது இடத்திற்கு வந்துள்ளது. அதேசமயம், ஆசிய அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 19வது இடத்தில் உள்ளது.

உலகளவில், நம்பர் 1 இடத்தில் பெல்ஜியமும், நம்பர் 2 இடத்தில் பிரான்சும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

அதற்கடுத்த இடங்களில், இங்கிலாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் உள்ளன. அர்ஜெண்டினாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. உருகுவே 8வது இடத்திலும், மக்சிகோ 9வது இடத்திலும், இத்தாலி 10வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.