சென்னை:

2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலக முதலீட்டாளார் மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதால், அதுகுறித்து இந்திய தொழில் நிறுவன  கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில்  இந்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்த உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக  ஜெயலலிதா க இருந்தபோது கடந்த 2015ம ஆண்டு  அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை தொடர்ந்து  2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்த ஆண்டு நடத்த முடியாத சூழல் உருவானதால், அடுத்த ஆண்டு  ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்றும், அதற்காக ரூபாய் 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை  இந்திய தொழில் நிறுவன கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.