Random image

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: 400மீ ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ் இறுதி சுற்றுக்கு தகுதி

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தின் இறுதி சுற்றுக்கு இந்தியாவை சேர்ந்த ஹீமா தாஸ் முன்னேறியுள்ளார். ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியின் ஹீமா தாஸ் 52.10 நொடிகளில் இலக்கை அடைந்து இறுதி சுற்றுக்கு நுழைந்தார். அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் மேன்சன் 53 நொடிகளில் இலக்கை அடைந்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.
Hima
இதற்கு முந்திய சுற்றில் 400 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் பங்கேற்ற ஹீமா தாஸ் 52.25 நொடிகளில் வெற்றிப்பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதி போட்டியில் ஹீமா தாஸ் உடன் பங்கேற்ற ஆசிய ஜூனியர் சாம்பியனான ஜிஸ்னா மேதிவ் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார்.

” முதல்முறையாக 200 மீட்டர் ஓட்டப்பந்தம் எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் டெக்னிக்கல் சார்ந்த போட்டி. இறுதி போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே இலக்கை அடைய நான் முயற்சிப்பேன் “ என்று ஹீமா கூறினார்.

ஜூனியர் தடகள போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலில் தனக்கு கிடைத்த 2வது வாய்ப்பில் 7.75 மீட்டர்களை கடந்துள்ளார். ஜப்பானை சேர்ந்த யூகி ஹஷியோகா 8.03 மீட்டர் தொலைவை கடந்து தங்கம் வெற்றுள்ளார். கீயூபாவை சேர்ந்த விடால் 7.94 மீட்டர் தொலைவை கடந்து சில்வர் பதக்கத்தை பெற்றார்.

இதே போல் ஆண்களுக்கான ஹாம்மர் த்ரோ போட்டியில் ஆசிய ஜூனியர் சாம்பியனான ஆஷிஷ் ஜாஹர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌரவ் 48.61 நொடிகளில் இலக்கை எட்டி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். பெண்களுக்கான டிஸ்க் த்ரோவில் அர்பன்தீப் கவுர் 48.17 நொடிகளில் இலக்கை எட்டியதால் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.