உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன்….இறுதி போட்டியில் பி.வி. சிந்து தோல்வி

துபாய்:

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.

துபாயில், உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு அரை இறுதி போட்டியில் இந்தியாவின் சிந்துவும், சீனாவின் யுபெய் சென் ஆகியோர் மோதினர்.

மொத்தம் 59 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் சிந்து 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இன்று நடந்த இறுதி போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுசிவுடன் சிந்து மோதினார். 21-15, 12- 21, 19- 21 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் சிந்து தோல்வியடைந்தார்.