கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 90.38 லட்சத்தை தாண்டியது.

--

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,30,252 உயர்ந்து 90,38,807 ஆகி இதுவரை 4,69,604 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,252 பேர் அதிகரித்து மொத்தம் 90, 38,807 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,328 அதிகரித்து மொத்தம் 4,69,604 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 48,33,884 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,737 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,077 பேர் அதிகரித்து மொத்தம் 23,56,655 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 267 அதிகரித்து மொத்தம் 1,22,247 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,80,100 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,851  பேர் அதிகரித்து மொத்தம் 10,86,990 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 601 அதிகரித்து மொத்தம் 50,659 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,79,226 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,728  பேர் அதிகரித்து மொத்தம் 5,84,680 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 109 அதிகரித்து மொத்தம் 8,111 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,39,711 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,183  பேர் அதிகரித்து மொத்தம் 4,26,910 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 426 அதிகரித்து மொத்தம் 13,703 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,37,262 பேர் குணம் அடைந்துள்ளனர்.