உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.09 கோடியை தாண்டியது

--

வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,73,821 ஆகி இதுவரை 5,23,046 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,264 பேர் அதிகரித்து மொத்தம் 1,09,73,821 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,147 அதிகரித்து மொத்தம் 5,23,234 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 61,34,784 பேர் குணம் அடைந்துள்ளனர்.  58,134  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,847 பேர் அதிகரித்து மொத்தம் 28,36,800 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 682 அதிகரித்து மொத்தம் 1,311,480 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 11,91,054 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,984  பேர் அதிகரித்து மொத்தம் 15,01,353 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1277 அதிகரித்து மொத்தம் 61,990  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,16,147 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,760  பேர் அதிகரித்து மொத்தம் 6,61,165 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 147 அதிகரித்து மொத்தம் 9,683 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,28,978 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,948  பேர் அதிகரித்து மொத்தம் 6,27,168 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 377 அதிகரித்து மொத்தம் 17,225 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,79,902 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 576 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,14,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 43,995 ஆக உள்ளது.