உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,84,12,087 ஆகி இதுவரை 12,30,101 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,68,808 பேர் அதிகரித்து மொத்தம் 4,84,12,087 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,054அதிகரித்து மொத்தம் 12,30,101 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,46,59,328 பேர் குணம் அடைந்துள்ளனர். 89,319 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை1,06,263 பேர் அதிகரித்து மொத்தம் 97,99,229 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,192 அதிகரித்து மொத்தம் 2,39,820 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 62,85,777 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,465 பேர் அதிகரித்து மொத்தம் 83,63,412 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 704 அதிகரித்து மொத்தம் 1,23,354 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 77,19,630 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,815 பேர் அதிகரித்து மொத்தம் 55,90,941 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 622 அதிகரித்து மொத்தம் 1,61,170 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,64,344 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,768  பேர் அதிகரித்து மொத்தம் 16,93,454 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 389 அதிகரித்து மொத்தம் 29,217 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 12,66,931 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,558  பேர் அதிகரித்து மொத்தம் 15,43,321 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 385 அதிகரித்து மொத்தம் 38,674 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,22,662 பேர் குணம் அடைந்துள்ளனர்.