இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.59 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,59,640 ஆக உயர்ந்து 1,17,336 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 54,218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 77.59,640 ஆகி உள்ளது.  நேற்று 685 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,17,336 ஆகி உள்ளது.  நேற்று 74,214 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 69,46,325 ஆகி உள்ளது.  தற்போது 6,94,680 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 7,539 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,25,197 ஆகி உள்ளது  நேற்று 198 பேர் உயிர் இழந்து மொத்தம் 42,831 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,177 பேர் குணமடைந்து மொத்தம் 14,31,856  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 3,620 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,96,919 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,524 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,723 பேர் குணமடைந்து மொத்தம் 7,58,138 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,778 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,88,551 ஆகி உள்ளது  இதில் நேற்று 74 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 10,770 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,217 பேர் குணமடைந்து மொத்தம் 6,84,835 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,077 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆகி உள்ளது  இதில் நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,825 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,314 பேர் குணமடைந்து மொத்தம் 6,55,170 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,383 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,63,858 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,790 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,581 பேர் குணமடைந்து மொத்தம் 4,27,675 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.