உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சம் ஆனது

டில்லி

லக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் அதிக அளவில் உள்ளன.

இன்று மாலை வரையிலான கணக்கின்படி பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 3.31 கோடியைத் தாண்டி உள்ளது.

மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அதாவது 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.

இதன் மூலம் கொரோனா தொற்று அதிக அளவில் உலகெங்கும் உள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.

அதே வேளையில் பல நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

தற்போது தங்களைக் காத்துக் கொள்வது மக்களின் பொறுப்பாகச் சிறிது சிறிதாக மாறி வருகிறது

எனவே மக்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என சுகாதார ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.