உலகெங்கிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்

தடை இருந்தாலும் ஜல்லிகட்டை நடத்துவோம் என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளது. மறுபுறம் சமூக வளைதளங்களான வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் உலகம் முழுவதும் கோடிகணக்கானவர்கள் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் விடுக்கப்பட்ட அழைப்பினை தொடர்ந்து லட்சக் கணக்கான இளைஞர்கள் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசியா, சிங்கப்பூர், கனடா, குவைத், துபாய் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆதரவு ஆர்ப்பாட்டம் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரிலும் ஜல்லிக்கட்டு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: world wide protest to save jallikattu, உலகெங்கிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்
-=-