உலக பெண்கள் டி 20 போட்டி: நம்பர் 1 ஆஸ்திரேலியாவை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

சிட்டி:

ஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக பெண்கள் டி 20 போட்டியில் உலக நம்பர் 1 ஆஸ்திரேலிய அணியை இந்திய பெண் அணி வீழ்த்தி சாதனை படைத்தது. இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ்-ன் அதிரடியான பந்துவீச்சில் ஆஸ்திரேய அணி சுருண்டது.

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 8ந்தேதி வரை நடைபெறுகிறது.  இந்த போட்டிகளில் 10 நாடுகளைச்சேர்ந்த பெண்கள் அணி பங்கேற்கிறது. இந்த போட்டிகள் பிரிவு ஏ, பிரிவு பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியான ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன.

‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்டி மைதானம் உள்பட 6 மைதானங்களில் நடைபெறுகிறது. இன்று முதல் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்குகின்றன. முதல்போட்டியே, இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவும் இடையே நடைபெற்றது.

இன்றைய போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி மட்டையுடன் களத்தில் குதித்தது.

இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக, ஷஃபாலி வர்மாவும், வந்தனாவும் களமிறங்கினர். நிதானமாகவும் சிறப்பாகவும் இருவரும் விளையாடி வந்த நிலையில், 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், 5வது ஓவரில் இருந்து சொதப்பல் தொடங்கியது.

மந்தனா 2 ஃபோர் எடுத்திருந்த நிலையில் 10 பந்துகளுக்கு மொத்தம் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொர்ந்து அடுத்த ஓவரில் தனது 29வது ரன்னில்  ஷஃபாலி வர்மா வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கவுர் 2 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தடுமாற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

10ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்த நிலையிலும், அடுத்த 6 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமெ எடுத்து சோகத்தை ஏற்படுத்தியது.  இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த நிலையில்,  ரோட்ரிகஸ் தனது 26 வது ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  தீப்தி சர்மா, 46 பந்துகளில் 49 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து வந்தார்.

இதையடுத்து 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆர்ப்பாட்டமாக களத்தில் புகுந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜே ஹீலியும், பிஎல்மூனியும் களமிறங்கினர். ஆனால், இந்திய அணியைச்சேர்ந்த பூனம் யாதவ் மற்றும் கயாக்வாட் பான்டேவின் பந்துக்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.  6வது ஓவரில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதலி விக்கெட் விழுந்தது. அதையடுத்து, லேனிங் களமிறங்கினார். இந்த நிலையில், பூனம் யாதவின் பந்தில்  ஹீலியை 51 ரன்னில் வெளியேற ஆஸ்திரேலிய அணி பதற்றம் அடைந்தது. 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து ஆட்டம் மீண்டும் தீவிரம் அடைந்தது. அதேவேளையில் இந்திய பந்து வீச்சாளர் பூனம் யாதவ்-ன் பந்து வீச்சும் அனாயசமாக இருந்தது. ஆட்டத்தின் போக்கே மாறத்தொடங்கியது. பூனம் பந்தில் அடுத்தடுத்து  ஹேன்ஸ், பெர்ரி வெளியேற ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் சோர்வடைந்தனர்.  இந்த நிலையில், தனது 3வது ஓவரில் பூனம் மேலும் ஒரு விக்கெட்டை சாய்க்க ஆட்டம் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்தது.

இறுதியில்  19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வெற்றியடைந்துள்ளது.

பூணம் யாதவ் 4 விக்கெட்டுகளும் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்தனர்.

இந்த போட்டியில், உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 17 ரன் வித்தியாசத்தில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

போட்டிக்கான வீராங்கனைகள் விவரம் :-

இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, தனியா பாட்டியா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கெய்க்வாட், ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஷபாலி வர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ்.

ஆஸ்திரேலியா: மெக் லானிங் (கேப்டன்), எரின் பர்ன்ஸ், நிகோலா கேரி, ஆஷ்லி கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனசென், டெலிசா கிம்மின்ஸ், சோபி மோலினெக்ஸ், பெத் மூனி, எலிசி பெர்ரி, மேகன் ஸ்கட், அனபெல் சுதர்லாண்ட், விலாமின்க், ஜார்ஜியா வாரஹம்.