உலககோப்பை கிரிக்கெட் 17வது லீக் ஆட்டம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா பாகிஸ்தான்….

 

லண்டன்:

லக கோப்பை தொடரின் 17வது லீக் போட்டி இன்று பாகிஸ்தான், ஆஸ்திரேயா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டி,  இங்கிலாந் தின் டான்டன் நகரில் உள்ள தி கூப்பர் அசோசியேஸ் கன்ட்ரி மைதானத்தில் (The Cooper Associates County Ground) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

வலிமைக்க வீரர்களை  கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த நிலையில், இன்று பாகிஸ்தானுடன் நடைபெறும் போட்டியில் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேயாவை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது இன்று மாலை தெரிய வரும்

ஏற்கனவே   பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் மே.இ,தீவுகளிடம் மோசமான தோல்வியைப் பெற்றிருந்தது. அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கையுடன் நடைபெற்ற ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள காத்திருக்கிறது. பாகிஸ்தானில் பாபர் ஆஸம், முகமது ஹபீஸ், சர்பராஸ்  கியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர்.

போட்டி நடைபெறும் டான்டனில் இன்று வானிலை மந்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறிது உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Australia vs Pakistan, Match 17, worldcup cricket 2019
-=-