பெங்களூரு,

ன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ.நா.சபை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக  அறிவித்தது. இதையடுத்து உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

3-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் யோக நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

உபியில் நடைபெற்ற நிகழ்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகா செய்தார்.

இந்நிலையில், உலகின் மற்றும் இந்தியாவின் பழமையான யோகா ஆசிரியர் டாகோ போர்டன்-லின்ச்  மற்றும் அம்மா நந்நம்மாள் ஆகியோர்  பெங்களூரில் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு யோகா செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மூதாட்டிகளான லிஞ்ச் மற்றம் நந்நம்மாள் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் யோகா செய்தது பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.