உலகின் அதிக செலவுமிக்க விவாகரத்து – $36 பில்லியன் பெற்ற மனைவி..!

நியூயார்க்: ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் வெற்றிகரமான நிறுவனமாக திகழ்வது அமேசான். இதன் நிறுவனரும் அவர் மனைவியும் விவாகரத்துப் பெற்றுள்ளதானது, உலகின் செலவுமிகுந்த விவாகரத்து சம்பவமாக பார்க்கப்படுகிறது.

55 வயதாகும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், 48 வயதாகும் தனது மனைவி மெக்கன்ஸியை விவாகரத்து செய்துள்ளார். அதனடிப்படையில், மெக்கன்ஸிக்கு 36 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளை அவர் வழங்குகிறார்.

தன்னிடம் 75% பங்குகளை வைத்துக்கொள்கிறார். கடந்த 1993ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணமானது. இந்த தம்பதிகளுக்கு மொத்தம் 4 குழந்தைகள். அமேசான் நிறுவனம் கடந்த 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

மொத்தம் 36 பில்லியன் டாலர் மதிப்புகொண்ட சொத்து வழங்கப்படுவதானது, உலகின் மிகவும் செலவு மிகுந்த விவாகரத்து நடைமுறையாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது இதைக்குறித்த பேச்சாகவே உள்ளது.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.