Random image

உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் ஜெர்மனியில் இயக்கம்

உலகிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் ஜெர்மனியில் இயக்கப்பட்டது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் பணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

train

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் முதல் முறையாக ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள குசாவன் நகரில் இயக்கப்பட்டது. மணிக்கு நூறு கிலோ மீட்டரை கடந்து செல்லும் இந்த ரயில் பிரீமர்வோர்டு ரயில் நிலையத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது.

ஹைட்ரஜன் உதவியுடன் இயங்கும் இந்த ரயில் எஞ்சினை பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் உருவாக்கியது. இந்த ரயிலில் ஹைட்ரஜன் டேங்க் அதன் கூரை மீது அமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் இருந்து வெளியேறும் ஹைட்ரஜன் வாயுக்கள் மின்சக்தியாக செயல்பட்டு எஞ்சினை இயக்குகிறது. இந்நிலையில் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் எஞ்சினை தயாரித்த பெருமை ஆல்ஸ்டம் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

ஹைட்ரன் ரயில் எஞ்சின்கள் ஜெர்மனியில் ஓடும் கொராடியா லிண்ட் என்ற பயணிகள் ரயிலில் பொறுத்தப்பட்டது. காற்று மாசுபடுதலை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதிகளவில் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ஜெர்மனியின் அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து வரும் 2021ம் ஆண்டிற்குள் 14 புதிய ஹைட்ரஜன் ரயில்களை அறிமுகப்படுத்த அல்ஸ்டம் நிறுவனம் முயற்சிகள் எடுத்து வருகிறது.

இவற்றை தவிர பிரிட்டன், நெதர்லாந்து, நார்வே, இத்தாலி, கனடா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் கவனம் ஹைட்ரன் ரயிலை நோக்கி உள்ளன. உலகம் முழுவதும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து மாற்று ஏற்பாடு செய்வதில் நிபுணர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் இயக்கப்பட்டுள்ளது.