நியூயார்க்

நாளை முதல் உலகில் அதிக தூரம் மற்றும் அதிக நேரம் பயணிக்கும் விமான சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வான் வழிப் பயணம் என்பது மக்களுக்குத் தரை வழி மற்றும் கடல் வழிப் பயணத்தைக் காட்டிலும் பல்வேறு சுவாரஸ்யங்களை அடக்கியதாக உள்ளது. இத்தகைய சுவாரஸ்யத்தை அதிக்ரிக்கும் வகையில், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த குவாண்டஸ் என்னும் விமான நிறுவனம், நீண்ட நேரம் பயணிக்கின்ற வகையிலான விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.

வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது நாளை முதல் இந்த விமானம் தன் முதல் நீண்ட நேரப் பயணத்தைத் தொடங்க இருக்கின்றது.   இவ்விமானம் தொடர்ச்சியாக 20 மணி நேரம் வானில் பயணம் செய்கின்றது.   இந்தளவிற்கு உலக அளவில் அதிக நேரம் இயங்கக்கூடிய முதல் விமானமாக இது அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், தனது நீண்ட தூர பயணமாக முதல் முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதிக்கு அது பயணிக்க உள்ளது.   நாளை சிட்னியில் இருந்து புறப்படும் அந்த விமானம் தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயணித்தவாறு ஞாயிற்றுக்கிழமை காலை அமெரிக்காவை வந்து சேரும் என குவாண்டஸ் நிறுவனம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

இந்த விமானம் நீண்ட தூரப் பயணத்தைச் சமாளிக்குமா என்பதனை தெரிந்துக் கொள்ள  பல சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த விமானம் தொடர்ச்சியாக இதுவரை மூன்று முறை 19 மணி நேரம் இடைவிடாது பயணிக்க வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  இந்த பரிசோதனையில் விமானம் வெற்றியடைந்தது.  எனவே தற்போது குவாண்டஸ் நிறுவனம் இந்த நீண்ட தூரப் பயணச் சேவையை முதல் முறையாக மேற்கொள்ள உள்ளது