உலகின் மிக அதிக எடை உள்ள பெண்மணியான, இமான் அஹமது அப்துல்லாடி இன்று மரணமடைந்தார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த 37 வயது பெண்மணி இமான். இவர் கிட்டத்தட்ட 500 கிலோ எடையோடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார். இங்கு அவருக்கு ‘பேரியாட்ரிக் சர்ஜரி’ (Bariatric Surgery) எனப்படும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், அவரது எடை கிட்டத்தட்ட 250 கிலோ வரை குறைந்தது.  ஆனால், எடை குறைப்புக்குப் பிறகு  அவர் உடல் நிலை ஆரோக்யம் மிக மோசமடைந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், அபுதாபியில் உள்ள புர்ஜீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் இன்று இன்று அதிகாலை (25.9.2017)  நான்கு மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இத்தகவலை  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.