எவரெஸ்ட் சிகரத்தில் மாரத்தான் – பெங்களூரை சேர்ந்த இந்தியர்கள் சாதனை

எவரெஸ்ட் சிகரத்தில் நடத்தப்படும் மாரத்தான் ஓட்டம் மிக கடினமான ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் மேல் 60 கி.மீ. இலக்கை அடைய நடத்தப்பட்ட மார்த்தான் போட்டியில் பெங்களூரை சேர்ந்த தீபா பட் மற்றும் தஹர் மெர்சண்ட் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தின் மீது இவர்கள் நிகழ்த்தியுள்ள சாதனை   அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டியில் இதுவரை இந்தியாவை சேர்ந்த யாரும் வெற்றிப்பெறாத நிலையில் தீபா பட் மற்றும் தஹர் மெர்சண்ட் புதிய  சாதனையை படைத்துள்ளனர். தீபா பட் 19மணி 50 நிமிடங்கள் 40 நொடிகளில் தனது இலக்கை அடைந்துள்ளார். மே 29ம் தேதி அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய ஓட்டம் அடுத்த நாள் முற்பகல் ஒரு மணிக்கு முடிவடைந்தது. இடையில் அவர் இரு முறை தேனீர் இடைவெளி எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். மெர்சண்ட் 19 மணி 15 நிமிடங்கள் 10 நொடிகளில் தனது இலக்கை எட்டியுள்ளார்.

மாலை நேரம் சூரியன் மறைந்து கொண்டிருந்த நிலையில் பனியின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் இரவு தங்கி ஓய்வெடுக்க எண்ணியதால் 4மணி நேரத்தை வீணாகியதாகவும், இல்லையெனில் 15 மணி நேரத்தில்  இலக்கை அடைந்திருப்பேன் என்று மெர்சண்ட் கூறியுள்ளார். முதல் எட்டு இடங்களை நேபாளத்தை சேர்ந்தவர்கள் பிடித்திருந்தனர் என்று சொல்லும் மெர்சண்ட், நாங்கள் எங்களது ஓட்டத்தின் வேகத்தை அதிகரிக்க தொடங்கினோம். இறுதியாக இந்தியவை சேர்ந்த இரு பைத்தியக்காரர்களால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என்று மெர்சண்ட் புன்னகை பொங்க தனது சாகசத்தை பகிர்ந்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.