ஸ்ரீ நகர்: காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே உலகிலேயே உயரமான ரயில்வே பாலத்தை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டிமுடிக்கப்ப ட்டால் இதன் உயரம் 359 மீட்டர்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் நீளம் 1.3 கி.மீ இருக்குமாம். தற்போது சீனாவிலுள்ள ஷிபாய் ரயில்வே பாலம்தான் 275 மீட்டர் உயரத்துடன் உலகின் உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

எனவே, காஷ்மீரின் இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட் டால், இதுவே உலகின் உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை தட்டிச் செல்லும்.

மேலும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுர த்தை விட உயரமானதாகவும் இருக்கும். ஈபிள் கோபுரத்தின் உயரம் 324 மீட்டர்கள். இந்த பாலத்தின் கட்டுமானப் பணியை 2021 டிசம்பர் மாதத்திற்குள் முடிப்ப தற்கு திட்டமிடப்பட்டுள்ள தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால், இது இந்திய ரயில்வேயின் பெருமையாக மாறும் என்று நம்பப்படுகிறது.