டோக்கியோ:

உலகிலேயே எடை குறைவாக ஜப்பானில் பிறந்த ஆண் குழந்தை நலமுடன் வீடு திரும்பியது.


மத்திய ஜப்பானின் நகானா குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 258 கிராம் எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.

உலகிலேயே எடை குறைவான இந்த குழந்தை மருத்துவமனையில் வைத்தே தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

தற்போது 3 கிலோ எடை வந்ததும் அந்த ஆண் குழந்தையை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். இதனையடுத்து அந்த குழந்தை வீடு திரும்பியது.

ஏற்கெனவே, ஜப்பானில் 268 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த குழந்தை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.