மேம்பாலம்

லகின் மிக நீளமான நடை மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், 1621 அடி உயரத்தில் 279 அடி உயரத்தில் இரு மலைகளை இணைக்கும் விதமாக புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உபயோகத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட இந்த பாலம்,  சார்லஸ் குயோனன் சஸ்பென்ஷன் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

உலகின் மிக நீண்ட நடைபயணம் சஸ்பென்ஷன் பாலம் இதுவாகும்.  இந்த பாலம் சுவிட்சர்லாந் தின் ஜெர்மட் மற்றும் கிராசென் நகரங்களை இணைக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் உலகின் மிகப்பெரிய பாலமாகும்.

இந்த பாலம் தரையில் இருந்து சுமார் 85 மீட்டர் உயரத்தில் அமைக்‍கப்பட்டுள்ளது. கடினமான அதிர்வுகளைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கும், மலையேறுபவர்களுக்கும் இந்த பாலம், சிறந்த பொழுதுபோக்காக விளங்கும்.