உலகின் நீளமான கடல்பாலம் வரும் 24ம் தேதி திறப்பு

சீனா – ஹாங்காங் நாடுகளை இணைக்கும் உலகின் நீளமான கடல்பாலம் அக்டோபர் 24ம் தேதி திறக்கப்பட உள்ளது.

bridge

சீனா- ஹாங்காங் இடையே போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாக வரும் இம்மாதம் 24ம் தேதி ஜுகாய் – மாகோ பாலம் திறக்கப்பட இருக்கிறது. 55 கி.மீ. நீளம் கொண்ட இது உலகின் நீளமான பாலமாகக் கருதப்படுகிறது.

இதனால் ஹாங்காங் – ஜுகாய் இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து வெறும் 30 நிமிடங்களாகக் குறைக்கப்படுகிறது. இந்தப் பாலம் கட்டும் பணி கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கடந்த நிலையில் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.