உலகின் மிகவும் விலை உயர்ந்த ” தங்க ஷூக்கள் “ துபாயில் அறிமுகம் – ஒரு ஜோடி ஷூ வின் விலை ரூ.123 கோடி

வைரம் மற்றும் சுத்த தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட ஷூக்கள் துபாயி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தங்க ஷூக்களின் விலை ரூ.123 கோடி என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

shoe

பகட்டான கட்டுமானம், பிரத்யேக மேம்பாடு உள்ளிட்டவற்றிற்கு புகழ் பெற்றது துபாய் . குறிப்பாக உலகின் மிகப்பெரிய புர்ஜ் கலிஃபா மற்றும் மிகச்சிறந்த ஷாப்பிங் மால்கள் என துபாய் சிறப்புகளின் பட்டியல் நீள்கிறது. இந்த வரிசையில் தற்போது விலை உயர்ந்த ஷூக்களும் சேர்ந்துள்ளன.

உலகின் ஒரே ஒரு 7 ஸ்டார் ஹோட்டல் துபாயின் புர்ஜ் அல் அரபில் உள்ளது. இந்த ஹோட்டலில் விலை மதிப்பற்ற ஷூக்கள் வைக்கப்பட உள்ளன. ”பேஷன் டைமண்ட் பேண்ட்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்கள், சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளன. அதில் நூற்றுக்கணக்கான வைரக்கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் 15 கேரட் வைரங்கள் இரண்டு ஷூவின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஷூக்களை பேஷன் ஜூவல்லரி உடன் இணைந்து ஜாடா துபாய் தயாரித்துள்ளது. இந்த ஷூக்களின் மாதிரி மட்டுமே தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விற்பனையின் போது, வாடிக்கையாளரின் கால் அளவிற்கு ஏற்ப ஷூக்கள் செய்து தரப்படும்.

இந்த ஷூக்கள் ரூ.123 கோடி என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக உலகின் விலை மதிப்பற்றதாக கருதப்பட்ட டெப்பி விங்ஹாம் ஹை ஹீல்ஸ் ஷூக்கள் ரூ.109 கோடியாக விலை நிர்ணயிக்கப்பட்டது. ”பேஷன் டைமண்ட் பேண்ட்” அறிமுக நிகழ்ச்சியின் போது விற்கப்படாது என்றும், விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் தயாரிப்பாளர்களிடம் ஒரு ஜோடி ஷூக்கள் மட்டுமே உள்ளன.

You may have missed