நாக்பூர்: உலகின் மிகச்சிறிய பெண்ணாக கருதப்படும் ஜியோதி ஆம்ஜே, நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தனது வாக்கைப் பதிவுசெய்துள்ளார்.

நாக்பூரில் வசிக்கும் ஜியோதி ஆம்ஜே என்ற பெயருடைய பெண்மணி, வெறும் 62.8 செ.மீ மட்டுமே உயரம் கொண்டவர். இதனால், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு வயது 25.

கடந்த 2012ம் ஆண்டு, பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கெஸ்ட் ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வாக்குச்சாவடிக்கு வந்ததும், இவரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள், இவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தனது விரலில் வைக்கப்பட்ட அடையாள மையை தூக்கிக் காட்டியும், தனது வாக்காளர் அடையாள அட்டையை தூக்கிக் காட்டியும் போஸ் கொடுத்த அவர், அனைவருமே வாக்களிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

– மதுரை மாயாண்டி