உலகின் மிகச் சிறிய விண்கோள் : தமிழக மாணவர் சாதனை

--

வாஷிங்க்டன்

கலாம் சாட் என்னும் தமிழக மாணவர் உருவக்கிய மிகச்சிறிய விண்கோளை நாசா வானில் பறக்க விட்டது

மாணவர் ரிஃபத் ஷருக் (வயது 18) மற்றும் அவர் குழுவினர் சேர்ந்து உலகின் மிகச் சிறிய விண்கோள் ஒன்றை உருவாக்கினர்.  அதற்கு கலாம்சாட் என மறைந்த அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

நேற்று நாசா கலாம்சாட் விண்களத்தை வானில் செலுத்தியது.  இதன் மூலம் இந்தியா விண்வெளி உலகில் ஒரு புது சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி ஷருக் தெரிவித்ததாவது

”உலகின் மிகச் சிறிய விண்கோளைத் தயாரித்ததில் இந்தியன் என்ற முறையில் பெருமை அடைகிறேன்.  எனது குழுவினர் அனைவரின் ஒத்துழைப்பினால்தான் என்னால் இந்த சாதனையை செய்ய முடிந்தது.  இந்த விண்கோள் 3டி முறையில் புகைப்படங்களை பிரிண்ட் செய்யும்..  இதுவரை 3டி பிரிண்டிங் விண்கோள்களில் செய்யவில்லை.   இதுவும் ஒரு சரித்திரமே.  நாசாவுக்கும் எனது குழுவுக்கும் மிக்க நன்றி”

இவ்வாறு ஷருக் கூறினார்.

இவர் தமிழ்நாட்டின் கரூர் அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர்.