ஸ்ரீநகர்,

லகின் மிக உயரமான ரெயில் பாலம் இந்தியாவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்திற்கு செனாப் பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பாலம் ஜம்மு காஷ்மீரின் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்க முடியாத அளவில் உறுதியாக கட்டப்பட்டு உள்ளது.

இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய பாதுகாப்பு ஆலோசனையின் அடிப்படையில் இந்த பாலம் கட்டப்படுகிறது.

ரிக்டர் அளவுகோலில் 5.0  அளவிலான பூகம்பம் நிகழ்ந்தாலும், டிஎன்டி எனப்படும் சக்தி வாய்ந்த வெடிமருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும் பாதிக்கப்படாத வகையில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பாலம் இந்திய ரெயில்வே துறையின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொங்கன் ரெயில்வே செயல்படுத்தி வருகிறது.

காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் மீது  கட்டப்பட்டு வரும் இந்த பாலம் 2019ம் ஆண்டில் இந்த பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆறு உள்ளது.

இந்த ஆற்றின் மீது 1.315 கி.மீ நீளத்தில் 359 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த பாலம் மூலம், பாரமுல்லா – நகர் ஆகியவை ஜம்முவுடன் இணைக்கப்படும்.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தைவிட 35 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

வில் போன்ற அரை வட்ட  வடிவத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 24 ஆயிரம் டன் இரும்பும்,  மணிக்கு 260 கிமீ வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் திறன் கொண்டதாகவும்,  இதற்காக ரூ.1,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால், சீனாவில் பெய்பான் ஆற்றின் மீது 275மீ உயரத்தில் அமைந்துள்ள சுய்பாய் ரயில்வே பாலத்தை காட்டிலும் அதிக உயரம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

பாலத்தில் மீது  காற்றின் வேகத்தை கண்டறிவதற்காக சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 90 கிமீக்கு அதிகமாக காற்றின் வேகம் இருக்கும்பட்சத்தில் சிவப்பு சிக்னல் போடப்பட்டு ரயில் இயக்கம் நிறுத்தப்படும்.

மேலும் பயணிகள் மற்றும் ரயிலை மோசமான சூழல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஆன்லைன் மூலம் கண்காணித்தல் மற்றும் எச்சரிக்கை விடுக்கும் கருவிகளும் பாலத்தில் பொருத்தப்படும்.

தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்கும் வகையில் 63 எம்எம் தடிமன் கொண்ட ஸ்பெஷல் பிளாஸ்ட் ப்ரூப் இரும்பால் ரயில்வே பாலம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெயருடன்,  வெடிகுண்டுகளால் தகர்க்க முடியா ள உறுதியுடன் கட்டப்படும் உலகின் முதல் பாலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது இந்தியாவின் செனாப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.