ஜெனிவா:

லக அளவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 25லட்சத்தை தாண்டியுள்ளது. அதுபோல் பலி எண்ணிக்கையும் ஒருலட்சத்து 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, பேயாட்டம் ஆடி வருகிறது. உலக வல்லரசான அமெரிக்காவை புரட்டியெடுத்து வருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் அதன் ஆதிக்கம் தீவிரமடைந்து உள்ளது.

இன்று மாலை நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 25லட்சத்து 3 ஆயிரத்து 412  ஆக (25,03,412) உயர்ந்துள்ளது.  அதுபோல உயிரிழப்பும்  இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1லட்சத்து 71 ஆயிரத்து 809 ஆக அதிகரித்து உள்ளது. அதேவேளையில்குணமானோர் எண்ணிக்கையும்  6லட்சத்து 59ஆயிரத்து 462ஆக அதிகரித்து உள்ளது..

உலகிலேயே மிக அதிக அளவாக அமெரிக்காவில்   7.92,938  லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 42,518 உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் இத்தாலி நாடு உள்ளது. இங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,81,228 பேர். உயிரிழப்பு 24,114 என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3வது இடத்தில் ஸ்பெயின் நாடு உள்ளது இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,04,188 பேர், பலி எண்ணிக்கை  21,282 ஆக அதிகரித்துஉள்ளது.

4வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.  அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,383, பலி எண்ணிக்கை 20,265.

5வது இடத்தில்  ஜெர்மனி உள்ளது.  அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,47,103 ஆகவும், பலி எண்ணிக்கை 4,862 ஆகவும்உள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் – 18,985 ஆகவும்,  உயிரிழந்தோர் 603 ஆகவும் உயர்ந்துள்ளது.