இங்கிலாந்து அரசு குடும்ப வாரிசை வைத்து உலகளவில் நடந்த சூதாட்டம்

லண்டன்:

கிரிக்கெட், கால்பந்து சூதாட்டம் தான் எப்போதும் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இப்போது இங்கிலாந்து மன்னர் குடும்ப வாரிசை வைத்து உலகளவில் ஒரு மிகப்பெரிய சூதாட்டம் நடந்து முடிந்துள்ளது.

பிரிட்டன் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் தம்பதியருக்கு கடந்த 23ம் தேதி 3வது ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பிறப்பால் அரசு குடும்பம் மட்டுமின்றி உலகளவில் பலர் இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை வைத்து ஒரு கும்பல் சூதாடி வருமானம் பார்த்துள்ளது.

அது எப்படி என்று பார்ப்போம்…

இளவரசி கர்ப்பமாக இருக்கிறார் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் பிறக்கபோகும் குழந்தை ஆணா? பெண்ணா? எந்த நேரத்தில் பிறக்கும்?, எடை எவ்வளவு இருக்கும்? இது போன்ற விஷயங்களில் பணம் வைத்து சூதாட்டம் நடந்தது. இதில் பலர் வெற்றி பெற்று பணம் சம்பாதித்துள்ளனர். இது பெரிய அளவில் நடந்து முடிந்துள்ளது

அதேபோல் அரசு குடும்பத்தின் புதிய குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற சூதாட்டமும் நடந்தது. ஆண் குழந்தை பிறந்தால் ஜேம்ஸ் என்று வைப்பார்கள் என்றும், பெண் குழந்தை பிறந்தால் அலைஸ், விக்டோரியா, மேரி என்று பெயர் வைப்பார்கள் என்றும் சூதாட்டம் நடந்தது. உலகில் நல்லது நடந்தாலும், சரி கெட்டது நடந்தாலும் சரி அதை வைத்து சூதாடி வருமானம் பார்ப்பதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கத் தான் செய்கிறது.

குறிப்பாக இந்த மன்னர் குடும்பத்தில் ஒவ்வொரு முறை பிறக்கும் வாரிசை வைத்து உலகளவில் சூதாட்டம் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.