உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones – GOT) ஆங்கிலத் தொடரின் 8ஆவது சீசனின் முதல் எபிசோட் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது.

வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர் தான் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.1991ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய A Song of Ice and Fire என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டதே ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர்.

இந்நிலையில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் ’Game of Thrones’ ஹாஷ் டேகுகள் மற்ற அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளன.

முதலிடத்தில் #GameofThrones என்ற ஹாஷ்டேகும், அதனை தொடர்ந்து சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களான ப்ரான், சான்ஸா, ஆர்யா, டெனேரிஸ், ஜேமி, செர்ஸி ஆகிய பெயர்கள் ட்ரெண்டாகி வருகின்றன.