பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம்: இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் தகவல்

டில்லி:

சீர்கெட்ட பருவநிலை மாற்றங்களால் இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படும்  என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR) சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கால நிலை மாற்றத்தால் இந்தியாவில் 20 சதவிகித மாநிலங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இதனால், உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தால் இந்திய மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள சாஹிப்கஞ் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, சீர்கெட்ட வெப்பநிலை மாற்றத்தால் நெல் பயிரிடும் மால்ட்டோஸ் பழங்குடி மக்களின் நெல் பயிர்கள் புதிய வகை பூச்சிகளால் கடும் பாதிப்புக்குள்ளானது .

Lamtinhoi ஆய்வில், பூச்சிகளின் தாக்குதலால் நெற்ப்பயிர்கள் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைவதால் மால்டோஸ் பழங்குடியினர், சாந்தல் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து போவது சமூக மோதல்களுக்கு வழிவகுக்கிறது.

ICAR அறிக்கையின்படி, இமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதியில் உள்ள ஆப்பிள் பெல்ட்கள் போதுமான குளிர் தேவைக்காக அதிக உயரத்திற்கு மாற்றப்படுகின்றன.

மத்திய இந்தியாவில் பயிர்-சேதம் விளைவிக்கும் வசந்த மழைக்காலங்கள், மற்றும் பஞ்சாபில் திடீரென்று வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட கோதுமை மகசூல் போன்ற வேறு சில துயரமான நிகழ்வுகளும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

டெலவேர் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு திணைக்களம் (ஐஎம்டி) உருவாக்கிய ஆய்வறிக்கையில், காலநிலை மாற்றங்கள் இந்தியாவின் வருடாந்த விவசாய வருவாயை சராசரியாக 15 முதல் 18 சதவிகிதம் வரை குறைக்கக்கூடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.