டில்லி

காத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை என மத்திய  அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

பாஜகவினருக்கு மகாத்மா காந்தி மீது உள்ளூர ஒரு வெறுப்பு இருப்பதாகப் பல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  அதற்கேற்ப சாத்வி பிரக்ஞா உள்ளிட்ட பலரும் காந்தியைக்  கொன்ற கோட்சேவை புகழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.   இதற்கு எதிர்ப்பு அதிகரிக்கும் போது பாஜக தலைமை இவ்வாறு கூறுபவர்களை மிரட்டி அடக்கி விடுவதுண்டு.

மகாத்மா காந்தியின் 150 ஆம் பிறந்த நாளை பாஜக அரசு விமர்சையாக கொண்டாடியது.  அதை ஒட்டி பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் காந்திக்குப் புகழாரம் சூட்டினர்.   இது மக்கள் மத்தியில் பாஜக மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியது.

இந்த நம்பிக்கை பொய்யானது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.  மக்களவை கூட்டத் தொடரில் ஒரு விவாதத்தில் மத்திய கலாச்சார  அமைச்சர் பிரகலாத் சிங் படேல், காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவது தவறில்லை எனவும் இதைத் தாம் பெருமையுடன் நெஞ்சை உயர்த்தி சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.