தரமற்ற பேருந்துகள்: வாட்ஸ்அப்பில் குமுறிய அரசு ஓட்டுநர் சஸ்பெண்ட்

ரசு பேருந்து சரியில்லை என வாட்ஸப் வீடியோ வெளியிட்ட பழனியை சேர்ந்த ஓட்டுனர் விஜயகுமார் சஸ்பெண்ட செய்யப்பட்ட நிலையில் தனது தரப்பை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

பழனியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் விஜயகுமார் என்பவர், பழனியில் உள்ள அரசு பேருந்துகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளது என்றும்   பெரும்பாலான பேருந்துகளில் ஷட்டர், பிரேக், என எதுவுமே இல்லாமல் ஓட்டவேண்டியிருக்கறது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும்,
மழையின் போது, ஓழுகும் மழைநீரில் 4 மணி நேரம் இயக்கி வந்ததாகவும், பணிமனை அதிகாரிகள் பேருந்துகளின் நிலை குறித்து, கவலைப்படுவது இல்லை, என்றும் ஆதங்கப்பட்டார். அவரது பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் அவர் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் என் ஆதங்கத்தை…. உண்மை நிலையைத் தெரிவித்தேன். ஆனால் பேருந்து ஓட்டும்போது பெசியதாகக் கூறி என்னை சஸ்பெண்ட் செய்திருக்கிறது நிர்வாகம். நான் பேருந்து ஓட்டும்போது செல்போன் பேசவில்லை. சாதாரணாக பேசினேன். இரவு முழுதும் கண்விழித்து பேருந்தை ஓட்டும் நிலையில் தூக்க் வராமல் இருக்க நடத்துனருடனோ அருகில் இருப்பவருடனோ ஓட்டுநர்கள் பேசுவது இயல்புதான். இதற்காக சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம்” என்று கேள்வி எழுப்பினார்.