பெனாங்:

மலேசியா நாட்டின் பெனாங் மாநிலத்தில் நேற்று பலத்த மழை பொழிந்தது. தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பெய்ததால் அங்கு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளம் பெருக்கெடுத்து நகரை சூழ்ந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில், அரசு, தனியார் அலுவலகங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் பல கட்டடங்களில் தரை தளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

கார் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் வெள்ள நீர் புகுந்தது. வெள்ளம் காரணமாக பெனாங்கில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் தஞ்சைமடைந்துள்ளனர்.

கரையோரம் இருந்த சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. தரை தளத்தில் வசித்தவர்கள மேல் தளங்களுக்கு தஞ்சம் புகுந்தனர். மீட்டு பணிகளை மலேசியா அரசு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

 

[embedyt] https://www.youtube.com/watch?v=1ZNo5z8Mwmo[/embedyt]