ஜெய்ப்பூர்,

ட மாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக மரணம் நிகழ்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது இறப்பு குறித்து தற்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜஸ்தான் மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருப்பர் கீர்த்தி குமாரி. இவர் பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர். பன்றிக்காய்ச்சல் காரணமாக முதலில்  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு 12 மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் மரணத்தை தடுக்க முடியவில்லை. இது ராஜஸ்தான் மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தில்  திரண்டனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பன்றிக்காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவர் ஒரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என தெரிந்தும் அவருக்கு மோசமான சிகிச்சையே அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவரது சிகிச்சை குறித்து பாரதியஜனதா கட்சியின் மாநில தலைமையோ, மாநில பாரதிய அரசோ தகுந்த சிகிச்சை அளிக்க முன் வரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல் காரணமாக தீவிரமாக பாதிக்கப்பட்ட அவருக்கு எஸ்எம்எஸ் மருத்துவமனயில் வென்டிலேட்டர் பொருத்தப்பட வில்லை என்றும், அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும், வென்டிலேட்டர் பொருத்தியிருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்றும் அதிர்ச்சி கரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், மறைந்த கீர்த்தி குமாரியின் இறுதி சடங்கில்கூட பாரதியஜனதா கட்சியின் கலந்து கொள்வதை தவிர்த்து வருவதாகவும், இது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை யும் ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறிப்படுகிறது.

பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பால் மத்தியில் மற்றும் மாநிலத்தில்  ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.