“பூனை” மாதிரி வீட்டிற்குள் நுழைய முயன்ற திருடனை சிக்கவைத்த “நிஜ பூனை” – வைரல் வீடியோ

 

லண்டன்

வீட்டின் உரிமையாளர் தனது செல்ல பூனைக்குட்டியை வீட்டில் விட்டு விட்டு வெளியே சென்ற நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைய முயன்ற திருடனை மிரள வைத்த செல்ல பூனை திருட்டில் இருந்து காப்பாற்றியது.

தனது எஜமான் வீட்டு தோட்டத்தில் யாரோ வரும் ஓசை கேட்டு வீட்டின் பின் பக்க கதவருகே வந்த பூனைக்குட்டியைப் பார்த்து, வீட்டிற்குள் நுழைவதை யாரும் பார்க்காத வண்ணம் முட்டி போட்டு தவழ்ந்து வந்த அந்த திருடனுக்கு கதவருகே வந்ததும் பூனைக்குட்டி அங்கு நின்றிருந்தது அதிர்ச்சியை தந்தது.

அந்த திருடன் சுதாரிப்பதற்குள், அவன் வீட்டிற்குள் நுழையும் போது தனது மொபைல் போன் செயலி ஏற்படுத்திய அபாய சத்தத்தை கேட்டு சுதாரித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக போலீசுக்குத் தகவல் தந்ததையடுத்து போலீசார் விரைந்து வந்து அந்த திருடனை பிடித்துச்சென்றனர்.

வீட்டின் சிசிடிவியில் பதிவாகாயிருந்த இந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் போலீசார் வெளியிட்டனர், இது தற்போது வைரலாகி வருகிறது.